தர்மபுரி, நவ. 7: தர்மபுரி வேளாண்மை இணை இயக்குநர்(பொ) ரரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு, நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தவணை தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என உறுதியாக தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ, தங்களது ஆதார் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று, உடனடியாக ஆதார் பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெறலாம். பி.எம்.கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைத்திட, இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள், தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement

