தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக ஈப்பு (வாகன எண் TN09 BG 2345) பொலிரோ எல் எக்ஸ் என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட இவ்வாகனத்தை ரூ.75 ஆயிரம் என்ற விலைக்கு விற்பனை செய்ய தொழில்நுட்ப வல்லுநர் குழுவினரால் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை இன்று (7ம் தேதி) மாலை 3 மணிக்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மறு ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், விலைப்புள்ளியை கோரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement

