கிருஷ்ணகிரி, அக்.7: தேன்கனிக்கோட்டையில், நண்பர் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற தொழிலதிபர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு(45). இவர், டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி காலை 8 மணிக்கு கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் கூட்ரோட்டில் உள்ள தனது நண்பரான மாயக்கண்ணன் என்பவரை சந்தித்து விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நண்பரை சந்தித்து விட்டு, மீண்டும் மாலை 3 மணியளவில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் வீட்டுக்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அஸ்வினி காவேரிப்பட்டணம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement