தேன்கனிக்கோட்டை, அக்.7: தேன்கனிக்கோட்டை அருகே மின்னல் தாக்கி பெண் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த சித்தாண்டபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, அந்த பகுதியில் வசித்து வரும் காளியம்மாள் என்பவரின் கூரை வீட்டில் மின்னல் தாக்கியது. இதில், சாப்பிட்டு கொண்டிருந்த காளியம்மாள் உடல் கருகி படுகாயமடைந்தார். 9ம் வகுப்பு படிக்கும் அவரது மகள் துர்கா தப்பினார். அக்கம் பக்கத்தினர் காளியம்மாளை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து அஞ்செட்டி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement