ஊத்தங்கரை, அக்.7: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி எஸ்ஐ கோவிந்தராஜன் மற்றும் போலீசார், அம்மன் கோயில்பதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர் துரைசாமி நகரை சேர்ந்த புஷ்பா(43) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
+
Advertisement