தேன்கனிக்கோட்டை, டிச.6: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ, மாணவிகளை அழைத்து கொண்டு, பள்ளிக்கு வேன் சென்றது. பஞ்சப்பள்ளி அணை அருகே சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு வாகனமும், வேனும் நேருக்கு மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
+
Advertisement

