ஓசூர், டிச.6: ஓசூர் அருகே பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில் பவுர்ணமியையொட்டி மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. ஓசூர் மோரணப்பள்ளியில் மகா பிரத்தியங்கிராதேவி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மிளகாய் வத்தல் யாகம் செய்து வழிபடுகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு திருஷ்டி நீங்க மிளகாய் வத்தல்களை தீயில் போட்டு யாகம் நடத்தினர். தொடர்ந்து கோயிலில் மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கும், ராகு கேது சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த யாகத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து
+
Advertisement

