ஓசூர், ஆக. 6: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாகலூர் ஊராட்சி லிங்காபுரம் கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.28.66 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, பாகலூர் ஊராட்சி ஜீமங்கலம் கிராமத்தில் ரூ 33.99 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரமூர்த்தி, லோகேஷ் ரெட்டி, அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆனந்தப்பா, சிவசங்கர், மாவட்ட ஆதி திராவிடர் அணி தலைவர் முனிராஜ், பஷீர்அகமத், சுரேஷ்பாபு, தகவல் தொழில்நுட்ப அணி திலிபன், மதியழகன், வெங்கடப்பா, அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement