கிருஷ்ணகிரி, ஆக.5: கிருஷ்ணகிரியில் நேற்று காலை வழக்கத்தை விட சீதோஷ்ண நிலை மாறி இருந்தது. இதமான வெயிலும், லேசான சாரல் மழை துறியது. அதிகாலையில் பனியின் தாக்கம் காணப்பட்டது. வழக்கமாக 9 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், நேற்று முதல் மாலை வரை இதமான சூழல் தென்பட்டது. பொதுமக்கள் பலரும் சாரல் மழையில்...
கிருஷ்ணகிரி, ஆக.5: கிருஷ்ணகிரியில் நேற்று காலை வழக்கத்தை விட சீதோஷ்ண நிலை மாறி இருந்தது. இதமான வெயிலும், லேசான சாரல் மழை துறியது. அதிகாலையில் பனியின் தாக்கம் காணப்பட்டது. வழக்கமாக 9 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், நேற்று முதல் மாலை வரை இதமான சூழல் தென்பட்டது. பொதுமக்கள் பலரும் சாரல் மழையில் நனைந்தபடி சென்றனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மழையின் காரணமாக, வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.