கிருஷ்ணகிரி, டிச.4: பர்கூர் இன்ஸ்பெக்டர் இளவரசனுக்கு, ஜிட்டோபனப்பள்ளியில் உள்ள வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலம் ராத்தங் கிராமத்தை சேர்ந்த சரவணராம் என்பவரது வீட்டில், சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்ததில், அங்கு குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. மேலும், குட்காவை அந்த பகுதியில் உள்ள பெட்டி கடைகளுக்கு சரவணராம் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான 101 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள சரவணராமை தேடி வருகின்றனர்.
+
Advertisement

