காவேரிப்பட்டணம், நவ.1: காவேரிப்பட்டணம் அருகே மணிநகர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். இக்கட்டிடங்கள், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ், அமீகா அறக்கட்டளை அமைப்பால், வால்வாயில் புளூயிட் பவர் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் ஆதரவுடன் மார் ₹12 லட்சம் செலவில் கட்டப்பட்டது. நிகழ்ச்சியில், அமீகா அறக்கட்டளை அறங்காவலர்கள் லட்சுமி ராமமூர்த்தி மற்றும் தர்மராஜன், வால்வாயில் புளூயிட் பவர் இந்தியா நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி, அஷ்வத், அமீகா அறக்கட்டளை நிறுவனத்தின் பொதுமேலாளர் கோமதி சரவணன், மேற்பார்வையாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சுமதி, முருகம்மாள், காவேரிப்பட்டணம் தொகுதி கல்வி அலுவலர் ஃபெலிசிட்டா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement
