ஓசூர், நவ.1: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி, ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், ஓசூர்-மாலூர் சாலை முதல் சிங்கசாதனப்பள்ளி வரை சுமார் ரூ.4.9 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பெலத்தூர் முதல் தாளப்பள்ளி வழியாக கர்நாடக எல்லை வரை சுமார் ரூ.55 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, லோகேஷ் ரெட்டி, ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், பாபு, ரமேஷ், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் சிவசங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் முனிராஜ், பெலத்தூர் ரவி, திம்மராயப்பா, ராஜேந்திரன், சொக்கநாத்ராஜ், ஆனந்த்பாபு, அரசு அதிகாரிகள் மற்றும் பெலத்தூர், சிங்கசாதனப்பள்ளி, பூப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement
