ஓசூர், அக்.1: ஓசூர் ஊராட்சி ஒன்றியம், அச்செட்டிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கெலமங்கலம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 47 துறை சார்ந்த மனுக்களை பெறும் பணிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ராமூர்த்தி, நாகேஷ், சின்ராஜ், முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் முனிராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடசாமி, கிருஷ்ணமூர்த்தி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement