போச்சம்பள்ளி, ஜூன் 4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். வானம் பார்த்த பூமியான போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறுகிய கால பயிர்களான அவரை, துவரை, கொள்ளு, எள்ளு, தட்டப்பயறு வரிசயைில் முள்ளங்கி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த வாரங்களில் வரலாறு காணாத அளவிற்கு விளைச்சல் அதிகரித்து, வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் நிலத்திலே விட்டு வைத்தனர். மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முள்ளங்கியை இலவசமாக அளித்தனர். மேலும், கால்நடைகளுக்கு உணவாகவும் அளித்து வந்தனர். சில விவசாயிகள் ஏர் ஓட்டி மண்ணுக்கு உரமாக்கினார்கள். இந்நிலையில், சந்தையில் வரத்து சரிவு மற்றும் தேவை அதிகரிப்பால், முள்ளங்கி விலை உயர்ந்து வருகிறது. தற்போது விவசாய தோட்டத்திற்கே வியாபாரிகள் நேரடியாக சென்று, போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். கிலோ ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி தற்போது ரூ.25 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
+
Advertisement


