கிருஷ்ணகிரி, மார்ச் 6: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பா, உத்தனப்பள்ளி-கெலமங்கலம் சாலை போடிச்சிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியில் சோதனை மேற்கொண்டார். அதில் ₹3 ஆயிரம் மதிப்பிலான 2 யூனிட் கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்து, கெலமங்கலம் போலீசில் தில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில மாதமாக கற்கள் கடத்தி செல்வது அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement


