கிருஷ்ணகிரி, ஆக.4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், 5ம் தேதி (நாளை) ஓசூர் மாநகராட்சியில் வார்டு எண்.4,5,6 ஆகிய பகுதிகளுக்கு ஓசூர் பாலாஜி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், ஓசூர் ஒன்றியத்தில் கௌதாசபுரம், முத்தாலி, பலவனப்பள்ளி, நந்திமங்கலம் மற்றும் கெலவரப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு முத்தாலி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கங்கலேரி, செம்படமுத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு மாதேப்பட்டி சமுதாய கூடத்திலும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அகரம், ஆவத்தவாடி ஊராட்சிகளுக்கு அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பர்கூர் ஒன்றியத்தில் காட்டாகரம், மகாதேவகொல்லஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு சந்தூர் புதிய பஞ்சாயத்து கட்டிட வளாகத்திலும், சூளகிரி ஒன்றியத்தில் அத்திமுகம், வெங்கடேசபுரம், ஏ.செட்டிப்பள்ளி ஊராட்சிகளுக்கு அத்திமுகம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் என 6 முகாம்கள் நடைபெற உள்ளன.
இதே போல், வருகிற 6ம் தேதி, ஓசூர் மாநகராட்சியில் வார்டு எண்.4,5,6 ஆகிய பகுதிகளுக்கு ஓசூர் பாலாஜி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு எண்.8,9 பகுதிகளுக்கு கிருஷ்ணகிரி பாத்திமா கம்யூனிட்டி ஹாலிலும், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிவம்பட்டி, பொம்மேப்பள்ளி ஊராட்சிகளுக்கு சிவம்பட்டி பாரதி மகாலிலும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் காட்டேரி, புதூர்புங்கனை ஊராட்சிகளுக்கு காட்டேரி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், கெலமங்கலம் ஒன்றியத்தில் தொட்டமேட்டரை, பில்லாரி அக்ரஹாரம் ஊராட்சிகளுக்கு பில்லாரி அக்ரஹாரம் வி.பி.ஆர்.சி கட்டிடத்திலும், தளி ஊராட்சி ஒன்றியத்தில் பேலகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி மற்றும் கொமரனப்பள்ளி ஊராட்சிகளுக்கு பேளகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் என மொத்தம் 6 முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே, மேற்படி பகுதிகளில் நடைபெறும் முகாம்களில், சம்மந்தப்பட்ட பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.