தேன்கனிக்கோட்டை, ஜூலை 2: தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக இருந்தவர் லட்சுமண்(60), வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மஞ்சுநாத், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் சால்வை மற்றும் மாலை அணிவித்து, பணி ஓய்வு உத்தரவை வழங்கினர். நிகழ்ச்சியில், இளநிலை உதவியாளர் தேவராஜ், துப்புரவு மேற்பார்வையாளர் வனிதா, பிரபாகர், வார்டு கவுன்சிலர்கள் மணிவண்ணன், கிருஷ்ணன், சீதர், மொகமத்செரிப், அப்துர் ரஹ்மான், சுமதி, சஞ்சனா, கௌரி, பிரேமா, ரியானபேகம், மாது, அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


