போச்சம்பள்ளி, ஜூன் 7: தினகரன் செய்தி எதிரொலியாக ஒன்டிமாவூத்தூரில் சிதலமடைந்த மின்கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டது. போச்சம்பள்ளி அருகே ஒன்டிமாவூத்தூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் தனியார் பள்ளி அருகில் சாலையோரம் உள்ள 2 மின்கம்பங்கள் சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து, சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. மழையின்போது பலத்த காற்று வீசும்பட்சத்தில் அசம்பாவிதம் ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனவே, அதற்கு முன்பாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் இருந்த இரு மின்கம்பங்கள் மாற்றியுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
+
Advertisement


