கிருஷ்ணகிரி, ஜூன் 7: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த எர்கேட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் தருண் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பாக தருண் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர், தருண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தருண் உயிரிழந்தான். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார், தருண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
+
Advertisement


