ஊத்தங்கரை, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே தீர்த்தகிரிவலசை பகுதியை சேர்ந்த 10வயது சிறுமி 5ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம், அந்த சிறுமி தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த சரவீன் என்பவர், சிறுமியை அழைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுது கொண்டே வீட்டுக்கு ஓடி சென்று, நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்தாள். அவர்கள் இதுபற்றி சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சரவீனை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement


