ஊத்தங்கரை, அக்.12: ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில், வாங்க கற்றுக்கொள்வோம் என்னும் தலைப்பில், தீ தடுப்பு- பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ தடுப்பு, பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படுவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது குறித்து செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.