ஓசூர், அக்.12: ஓசூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஓசூரில் தி சிட்டிசன் டெவெலப்மென்ட் சர்வீஸ் சொசைட்டி அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சத்யமூர்த்தி, பொதுச்செயலாளர் சுபாஷ், பொருளாளர் குருமூர்த்தி, நிர்வாகிகள் கிருஷ்ணன், அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் நகரமான ஓசூரில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கின்றனர். ஓசூர் நகரின் மக்கள் தொகை மற்றும் தேவையையும், தொழில் துறையின் அதீத வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரவிருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியை, ஓசூரில் அமைத்திட வேண்டும். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தீவிர பரிசீலனை செய்து, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.