தேன்கனிக்கோட்டை, அக்.12: அஞ்செட்டி வனப்பகுதியில் கனமழையால் நான்கு ஆண்டுகளுக்கு பின்பு தொட்டள்ளா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு அஞ்செட்டி சுற்றியுள்ள ஏரி, குளங்கள் நிரம்பின. கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் அஞ்செட்டி வனப்பகுதியில் உற்பத்தியாகும் தொட்டள்ளா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இந்த தண்ணீர் கத்திரிப்பள்ளம் வழியாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின்பு தொட்டள்ளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
+
Advertisement