வேப்பனஹள்ளி, செப்.2: வேப்பனஹள்ளி பகுதியில், விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேப்பனஹள்ளி பேரிகை நெடுஞ்சாலையில், வேப்பனஹள்ளி முதல் நாச்சிகுப்பம் வரை திடீர் வளைவுகள் காணப்படுகிறது. இச்சாலை வழியாக ஓசூர் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அதிக வாகனங்கள் சென்று வருகிறது. வாகனங்களில் வருபவர்கள் அசுர வேகத்தில் வருவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி, காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, விபத்துக்களை தடுக்கும் வகையில், நாச்சிகுப்பம் குப்தா ஆற்றுப்பாலம் அருகே, வேப்பனஹள்ளியில் காவல் நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் வேகத்தடை அமைத்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement