தொண்டாமுத்தூர், அக்.30: கோவை அருகே பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வர சுவாமி முகாமை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றுக்கொண்டார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சதீஷ்குமார் வரவேற்றார்.
விழாவில் பேரூர் தாசில்தார் சேகர், பிடிஓ கலா ராணி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கேடிஆர் என்ற தியாகராஜன், கிளை செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பாக முகவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர்கள் கவிதகலா நன்றி கூறினார். இம்முகாமில் 1,154 மனுக்கள் பெறப்பட்டு, 84 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் கலைஞர் உரிமைத்தொகை பெற 619 பெண்கள் மனு செய்திருந்தனர்.
