கோவை, ஆக 30: கோவையில் உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம் உள்ளிட்டவை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, உக்கடம் பெரியகுளத்தில் நீர்நிலைக்கு 200 மீட்டருக்கு மேலே குளத்தை பார்த்து பறக்கும் படி ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் சவாரி 2 ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்டது.
ஜிப் லைன் சவாரிக்கு ரூ.150ம், ஜிப் சைக்கிள் சவாரிக்கு ரூ.250ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த குளக்கரையில் வார விடுமுறை நாட்களில் கூட்டம் வந்தாலும் யாரும், ஜிப் லைன் சவாரிக்கு ஆர்வம் காட்டவில்லை. தினமும் 5 பேருக்கும் கீழாகவே இதனை பயன்படுத்துகின்றனர். இது ஆரம்பித்த புதியதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். தற்போது யாரும் ஆர்வம் காட்டாததால் வரவேற்பு இல்லாமல் பரிதாப நிலையில் இந்த சவாரி உள்ளது.