கோவை, ஆக. 29: கோவை மாவட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆகஸ்ட் மாத தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மேல்நிலை பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வுகள் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் நடக்கிறது.
இந்த தேர்வுக்கு இன்னும் 7 வேலை நாட்கள் மட்டுமே உள்ளதால், காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தை நடத்தும் வகையில், மாணவர்களுக்கான ஆகஸ்ட் மாத தேர்வினை ரத்து செய்ய வேண்டும். இதனால், மாவட்டத்தில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை காலாண்டு தேர்வுக்கு தயார்ப்படுத்த முடியும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.