கோவை, செப். 27: கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக நித்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்பு மேட்டூர் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்தார். இதேபோல், தெற்கு மண்டல உதவி கமிஷனராக தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி வடக்கு மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமரன், நிர்வாகத்துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, சென்னைக்கு மாற்றப்பட்டார்.
வடக்கு மண்டல உதவி கமிஷனராக புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே, கிழக்கு மண்டலத்தில் பணிபுரிந்து வரும் முத்துசாமி, கூடுதல் பொறுப்பாக வடக்கு மண்டலத்தையும் கவனித்து வருகிறார். மேற்கண்ட தகவலை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.