கோவை, ஆக. 27: கோவை ஈஸ்ட் ரோட்டரி கிளப் , கேரிங் ஹாண்ட்ஸ் ஜிஜி 2576339 என்ற திட்டத்தை விஜிஎம் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளையில் நவீன வசதியுடன் கூடிய டயாலிசிஸ் மையத்தை நிறுவியது. பொருளாதார வசதியில்லாத சிறுநீரக நோயாளிகளுக்கு தரமான, மலிவான டயாலிசிஸ் சிகிச்சையை வழங்க இது துவக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்திரன், ராஜசேகர், விஜிஎம் மருத்துவமனை தலைவர் மோகன் பிரசாத், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுமன், கிளினிக்கல் கல்லீரல் நிபுணர் மித்ரா பிரசாத், ரோட்டரி கிளப் தலைவர் விஜய் கிருஷ்ணன், ராஜ் சித்தார்த், செல்வகுமார், சஞ்சீவி குமார் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். இந்த டயாலிசிஸ் மையம், ரோட்டரியின் பணி நோக்கில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். விஜிஎம் அறக்கட்டளை தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்களை இந்த திட்டத்தில் பங்கேற்க அழைக்கிறது.