Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெண்ணிடம் நகை பறிப்பு

கோவை,செப்.26:கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியார் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (57). இவர் நேற்று முன்தினம் மதியம் பைக்கில் தனது மனைவியுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இருகூர் ரோடு சுங்கம் அருகே வந்த போது, 2 பைக்கில் வந்த 3 பேர் திடீரென ரங்கசாமியை வழிமறித்தனர். அதில் ஒருவர் இறங்கி வந்து ரங்கராஜ் மனைவி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 3 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பைக்கில் தப்பினர். இதுகுறித்து ரங்கராஜ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நகை பறித்து தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.