கோவை, ஆக.21: கோவை மண்டல அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராபர்ட், பொருளாளர் பாலமுருகன், கோவை கிளை செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது அவர்கள், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு கல்லூரி ஆசிரியர், முதல்வர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கோவை, தொண்டாமுத்தூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், புலியகுளம் பகுதி கல்லூரிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.