கோவை, நவ. 19: கோவை பீளமேட்டில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளார். இதையடுத்து மாநாடு நடைபெறும் இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், எப்எல் 2 மற்றும் எப்எல் 3 பார்களை தற்காலிகமாக மூட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன் படி 15 அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், 5 பொழுதுபோக்கு மனமகிழ் மன்ற பார்கள் (எப்எல் 2) மற்றும் 18 நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள் (எப்எல் 3) ஆகியவை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்பட உள்ளது.


