தொண்டாமுத்தூர் செப். 19: கோவை அருகே தொண்டாமுத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் அறிமுக கூட்டம் மற்றும் கொடியேற்று விழா வட்டார தலைவர் எம்.வி.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் மருதூர் ரங்கராஜன் கொடி ஏற்றி வைத்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். விழாவில் ஏ.ஆர் வெங்கடாசலம், மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி, வீராசாமி, பாலு, சிங்காரவேல், நவீன்,கோவனூர் சின்ராஜ், ஆனந்த், அனிதா வினோத், நாட்டாமை சோமசுந்தரம், வேலுமணி, கிருஷ்ணசாமி, ஆறுச்சாமி, சி.டி.சி கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.