மேட்டுப்பாளையம்,செப்.19: மேட்டுப்பாளையத்தில், கஞ்சாவை விற்பனைக்காக ஆறரை கிலோ கஞ்சா வைத்திருந்த கேரள வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி ஆறரை கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த முனீர் (24) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்பி கார்த்திகேயன் கோவை கலெக்டர் பவன்குமாருக்கு பரிந்துரைத்தார். பின்னர், கலெக்டர் பவன்குமார் இட்ட உத்தரவின் பேரில் நேற்று கஞ்சாவை வைத்திருந்த கேரள வாலிபர் முனீர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில் உள்ள அவருக்கு அதற்கான ஆணையை சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினர்.