தொண்டாமுத்தூர், செப்.19: கோவை மேற்கு மண்டல திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடந்தது. ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளரும், தூய்மை பணியாளர் வாரிய தலைவருமான திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன் வரவேற்றார். கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளரும், தலைமை கழக பேச்சாளருமான வக்கீல் தென்னை சிவா தீர்மானங்களை முன்மொழிந்தார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 18 தொகுதிகளில் திமுக வெற்றிக்கு பாடுபடுவது, தூய்மை பணியாளர் நல வாரிய தலைவராக திப்பம்பட்டி ஆறுச்சாமியை நியமனம் செய்ததற்கு முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.