கோவை, அக். 18: கோவை தொப்பம்பட்டி நேரு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி உமா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் உயிரிழந்து விட்டார். இதனால் உமா மனவேதனையுடன் இருந்து வந்தார். மேலும் அவர் வழக்கமாக எடுத்து வந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த உமா யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement