கோவை, அக். 18: கோவை மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தண்ணீர் விநியோகம் செய்யும் ஊழியர்கள், தெருவிளக்கு பழுது பார்க்கும் ஊழியர்கள் உள்ளிட்ட கீழ்நிலை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவற்றை, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தேசிய செயலாளரும், வார்டு கவுன்சிலருமான நவீன்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் அன்சார், காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் ரகுராமன், காமராஜ்பவன் தலைவர் கோபால், திமுக வார்டு செயலாளர் கண்ணன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சாமுவேல்தாஸ், வார்டு தலைவர் பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், கலைச்செல்வன், கார்த்திக், புருஷோத்தமன், மாணவர் காங்கிரஸ் முரளி கிருஷ்ணன், மனோ லீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.