கோவை, அக். 18: கோவை ஆர்.எஸ்.புரம் 72வது வார்டில் அதிமுகவை சேர்ந்த பாகமுகவர் பிரகாஷ், தலைமையில் 50 பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில், பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதில், முன்னாள் கவுன்சிலர் அம்சவேணி, கிருபா சபரிநாதன், வட்ட செயலாளர்கள் ஜெகதீஸ், சுலைமான், சி.டி.டி பாபு, பகுதி நிர்வாகிகள் நாசர் அலி, புலவர் பழனிசாமி, ஆறுச்சாமி, முருகானந்தம், பாஷா, நவுஷாத், மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், பாகமுகவர்கள் உள்பட பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு தீபாவளி பண்டிகையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.