கோவை, செப். 18: கோவை டிவிஎஸ் நகரில் உள்ள மண்டபத்தில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆன்மிக நிகழ்வுகள் நேற்று நடந்தது. இதற்கு பாஜ கோவை நகர் மாவட்ட பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் சுரேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், ஹோமம், கோமாதா பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து 146 கோடி மக்களின் நலனை குறிக்கும் வகையில் 1,460 களிமண் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதனை தொடர்ந்து, ஹரித்வாரிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த கலசத்தை பெண்கள் மட்டுமே தலையில் சுமந்து, டி.வி.எஸ் நகரில் இருந்து இடையார்பாளையம் மாகாளியம்மன் கோயில் வரை ஊர்வலம் சென்று வழிபட்டனர். விழாவில், மாவட்ட துணைத் தலைவர் மகாலட்சுமி, தாமு, மாவட்ட செயலாளர் சதீஷ், முன்னாள் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜய காண்டீபன், சங்கர் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.