கோவை, அக்.16 : கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளது. இதனால் இந்த நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என அக்கோயில் செயல் அலுவலர் இரா.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
+
Advertisement