கோவை, செப். 16: கோவை சிங்காநல்லூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ரங்கநாயகி (65). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு முன்பு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நடந்து வந்த மர்ம நபர், ரங்கநாயகி கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி, கைகளால் நகையை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு மூன்றரை பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு, தனக்காக பைக்கில் காத்திருந்த மற்றொரு நபருடன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இது குறித்து அளித்த புகாரின்பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.