Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணுவ பணிக்கு தேர்வு

கோவை, செப். 15: ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் (தொகுதி-II) கோவையில் 4 மையங்களில் நடைபெற்றது. இதனை அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் இரண்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 4 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 5 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணி செய்தனர்.

போலீசாரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்எஸ்புரம் மாநகராட்சி மகளிர் பள்ளி, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, அவினாசிலிங்கம் கல்லூரி வளாகங்களில் 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 2349 பேர் தேர்வு எழுதினர். 1040 பேர் தேர்வு எழுத வரவில்லை.