கோவை, ஆக. 15: கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ஆடிஷ் வீதி தமாகா அலுவலகத்தில் நடைபெற்றது. கொங்கு மண்டல இளைஞரணி தலைவர் அபிராமி செந்தில்குமார் தலைமை தாங்கினார். கொங்கு மண்டல இளைஞரணி துணைத் தலைவர் கண்ணன், மாநில துணைத்தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர், வாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகப்படுத்தும் விழா மற்றும் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படும் ஜிகே மூப்பனார் பிறந்தநாள் விழா கோவை ஸ்ரீதேவி திருமண மண்டபத்தில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தலைவர் ஜி.கே வாசன் பங்கேற்கிறார். இதில் இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
மக்கள் தலைவர் ஜிகே மூப்பனாரின் திரு உருவச்சிலை கோவை பார்கெட் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க கோருதல் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீராம், சுபாஷ், மாணிக்கராஜ், அருண், ரூபன், ப்ளோரன்ஸ் ஏடன், ஜீவன், தரன், சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவை மாநகர தெற்கு மாவட்ட தலைவர் கார்த்திக் பிரசன்னா செய்திருந்தார்.