கோவை, நவ. 13: கோவை கணபதிப்புதூர் 3வது வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (63). இவர் கடந்த 5ம் தேதி காலை தனது ஸ்கூட்டரில் சித்தாபுதூர் அய்யப்பன் கோயில் பகுதிக்கு சென்று நின்றிருந்தார். அப்போது, அங்கு ஒருவர் கடையின் ஷட்டரை திறக்க மாரிமுத்துவை உதவிக்கு அழைத்தார். அவரும் அருகில் என்பதால் ஸ்கூட்டரில் இருந்து சாவியை எடுக்காமல் சென்றார்.
ஷட்டரை திருந்து விட்டு 10 நிமிடத்தில் திரும்பிய போது அவரது ஸ்கூட்டர் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும், ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. பின்னர், இதுகுறித்து மாரிமுத்து நேற்று முன்தினம் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து 10 நிமிடத்தில் ஸ்கூட்டரை திருடி சென்ற திருடனை தேடி வருகின்றனர்.
