கோவை, நவ. 13: கோவை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக நாராயணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அதன்படி, கோவை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ஷர்மிளா மாற்றப்பட்டு மகளிர் உரிமைத்தொகை திட்ட துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக, தாட்கோ பொது மேலாளர் நாராயணன் கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்று கொண்டார்.
