கோவை, அக். 13: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓட்டு திருட்டை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் சிறுபான்மை துறை தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆந்திர பிரதேசம் பொறுப்பாளருமான டென்ஸ்டன் ராஜா தலைமையில் கோவை மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் துரை அருள் தாஸ் முன்னிலையில் கவுண்டம்பாளையத்தில் உள்ள சர்ச் முன்பு மாபெரும் கையெழுத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டனர்.