கோவை, செப்.13 : கோவை அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘டாக் அதாலத் என்ற மண்டல அளவிலான தபால் குறைதீர்ப்பு கூட்டம் கூட்ஸ்செட் சாலையில் உள்ள மூதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையில் உள்ள குறைகள் மற்றும் புகார்களை வாடிக்கையாளர்கள் இந்த அலுவலகத்திற்கு வருகின்ற 26 ம் தேதிக்கு முன்பாக அனுப்பலாம். மேலும் டாக் அதாலத் நடைபெறும் நாளில் நேரில் ஆஜராகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.