கோவை, செப். 13: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற துவக்க விழா இன்று காலை 9.30 மணிக்கு கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இதனை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா துவக்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தொகைக்கான காசோலை வழங்கப்படுகிறது. இதில், கோவை மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.