கோவை, நவ. 12: கோவை செல்வபுரம் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சொக்கம்புதூர் ரோட்டில் நின்றிருந்த 2 பேரை சந்தேகத்தில் விசாரித்தனர். சோதனை செய்த போது இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்ற தெலுங்குபாளையத்தை சேர்ந்த கார்த்திகை செல்வம் (26), ஈரோடு புதூரை சேர்ந்த தேவேந்திரன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 230 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1,800 பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை போத்தனூர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பின்புறம் கஞ்சா விற்று கொண்டிருந்த உக்கடத்தை சேர்ந்த முகமது ஆரிப் (26), வெள்ளலூரை சேர்ந்த நிஜாம் சபீக் (26) ஆகிய இருவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. செட்டிபாளையம் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமது நவாஸ் (30) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
