கோவை, செப்.12 : கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மாதிரிகள் மற்றும் யோசனைகளை முன்வைத்தனர்.
கோவை மண்டல அறிவியல் மையத்தின் புத்தாக்க மைய ஆலோசகர் லெனின் பாரதி மற்றும் குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் ஜெகநாதன் ஆகியோர் மாணவர்களின் மாதிரிகளை மதிப்பீடு செய்தனர். சிறப்பாகப் பங்களித்த நூர் சையது மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஹேக்கத்தானில் முதலிடம் பெற்றது.